பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்அலி_சர்தாரி சமீபத்தில் திடீர் என் துபாய்க்கு சென்றார். . உடல் நலகுறைவுக்கு சிகிச்சை_பெற சென்றதாக பிறகு தகவல் வெளியானது. அவருக்கு மாரடைப்பு என்வும் , மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டதால் பக்கவாதம் என்வும் கூறபட்டது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது .

இன்னும் ஒரு சில நாட்கள் துபாயில் சிகிச்சைபெற திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் பாகிஸ்தான் திரும்ப_தயங்குவதாகவும் இன்று புதியதகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் ராணுவத்தில் உருவான நெருக்கடியேகாரணம் என கூறபபடுகிறது. ராணுவ அதிகாரிகளுக்கும் சர்தாரிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ராணுவம் சர்தாரியை கேட்காமலேயே சில நடவடிக்கையில் ஈடு பட்டது. இதுதனக்கு செய்யும் துரோகமாக கருதிய சர்தாரி . இதுபோன்ற துரோகசெயலில் ராணுவம் ஈடுபடாது என உத்தரவாதம் தந்தால் மட்டுமே நாடு திரும்புவேன் என நிபந்தனை விதித்துள்ளார்.

Tags:

Leave a Reply