கறுப்பு பணத்துடன் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது . கறுப்புபணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். கறுப்புபணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை மத்திய அரசு ரகசியமாக வைத்திருப்பதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கறுப்பு பணம் தொடர்பான ஒத்திவைப்பு_தீர்மானம் கொண்டு வந்த போது

பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது கறுப்புபணம் குறித்து அவையில் விவாதம் நடத்தபடவில்லை. பணம் பதுக்கி வைத்திருக்கும் 782 பெயர்களை மத்திய அரசு ரகசியமாக_வைத்துள்ளது.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கபட்டுள்ள பணத்தை திருப்பி கொண்டுவர வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்துடன் தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை மறுக்க முடியாது. வெளிநாட்டில் பணத்தை பதுக்கவில்லை என்று எம்.பி.,க்கள் அனைவரும் உறுதி செய்யவேண்டும். கறுப்பு பணம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply