நடப்பு ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்கை எட்டுவது கடினம் என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது .

2011-12-ஆம் நிதி ஆண்டில் 30,000 கோடி டாலருக்கு (சுமார் ரூ.16 லட்சம் கோடி) ஏற்றுமதி மேற்கொள்ள இலக்கு நிர்ணயம்

செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த இலக்கை எட்டுவது எளிதல்ல என்பதை மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் தற்போது உணர்ந்துள்ளது.

ஏப்ரல்-நவம்பர் மாத காலத்தில் 19,270 கோடி டாலருக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது. இதே காலத்தில் இறக்குமதி 30,950 கோடி டாலராக இருந்தது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு 25 சதவீதமாக உள்ளது. இவை இரண்டும் பாரம்பரிய ஏற்றுமதி சந்தைகளாக இருந்து வருகின்றன. தற்போது இச்சந்தைகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற புதிய சந்தைகளில் கவனம் செலுத்துமாறு ஏற்றுமதியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply