""கோமாதா எங்கள் குலமாதா, குலமாதர் நலங்காக்கும்
குணமாதா, புவிவாழ்வில் அருள் பொங்கும் திருமாதா''
என்ற சரஸ்வதி சபதம் திரைப்படப் பாடல் உங்கள் காதில்
ஒலிக்கின்றதா?

ஒரு பசுமாடு தன்னையே கொடுத்து உலகை வாழ்விக்கிறது. ஆனால் பசுக் களின் இன்றைய நிலை பரிதாபத்திற்குரியது. திருக்கோயில்களில்

காணிக்கையாக விடப்படும் பசுமாடுகள் அனைத்து சட்டவிதிகளையும் மீறி கேரளாவில் உள்ள மாட்டிறைச்சி கூடங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன. இந்திய நாட்டில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நிறைவுடைய செல்வமாய் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவன பசுமாடும், அதன் கன்றுகளும்.

""திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி''
(திருவாய்மொழி 10-3-10) (பரமபதத்தில் இருக்கும் இருப்பைக்
காட்டிலும் பசுமாடுகளை மேய்ப்பதிலேயே எம்பெருமான் விருப்பம் கொள்கிறான்.) என்று ஆழ்வார் கொண்டாடியுள்ளார்.

மனித வாழ்வோடு முழுமையாகக் கலந்துள்ளது ஆவினம். எம்பெருமான் திருப்பள்ளியெழுச்சி கண்டவுடன் அவன் திரு முகத்திற்குக் காட்சியளிப்பது பசுமாட்டின் பின் புறமே ஏனெனில் மஹாலக்ஷ்மி அங்கே வாஸம் செய்துவருவ தால் கண்
விழிக்கும்போது எம்பெருமான் மஹாலக்ஷ்மியை காண விரும்பு கின்றான். புதுமனைபுகும் விழாவில் பசுமாடும் கன்றும் வீட்டிற்குள்ளே உலாவி வருவதால் அந்த வீடு புனிதத் துவம் பெருகிறது. திருவேங்கடமுடையான் திருமலைக்கு எழுந்தருளிய போது பசும்பாலை அருந்திக்களித்தான் என்று கூறப்படுகிறது.

ஊனின்மேய வாவிநீ யுறக்கமோ டுணர்ச்சிநீ
ஆனின்மேய வைந்துநீ யவற்றுள்நின்ற தூய்மைநீ
(திருச்சந்தவிருத்தம் 94)

என்ற பாசுரத்திற்கு பெரியவாச்சான்பிள்ளை பின் வருமாறு விளக்கவுரை அருளிச்செய்துள்ளார். ""(ஆனில் மேய ஐந்தும் நீ) பசுக்களிடமிருந்து உண்டாகின்றவையாய், ஜீவர்களின் தேகத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றவை என்று ஷாத்ரங்களில் சொல்லப்படுகிறது. 1.பசுஞ்சாணம், 2.பசுமூத்திரம், 3.பசும்பால், 4.பசுந்தயிர், 5. பசுநெய் என்னும் ஐந்தும் (பஞ்சகவ்யம்) உனக்கு வசப்பட்டவை. (அவற்றுள் நின்ற தூய்மை நீ) அந்த ஐந்துக்கும் உண்டான பரிசுத்தியும் உன் ஸங்கல்பத்தால் ஏற்பட்டதே. மிகவும் பரிசுத்தப்படுத்த கூடிய தேவரீரோடு உள்ள தொடர்பே மற்ற பொருள்களின் பரிசுத்திக்குக் காரணமாகிறது.

கொடுமுடி திரு.நடராஜன் என்பார் தான் தயாரிக்கும் பஞ்சகவ்யத்திற்கு திருமழிசையாழ்வார் அருளிச்செய்த ""ஆனைந்து'' என்று பெயரினைச்சூட்டியுள்ளார். இந்த ஆனைந்தை உபயோகித்து பயிர்களுக்கேற்ற கூடுதல் ஊட்ட சத்தை நிலைபெறச் செய்துள்ளார். இவர் எழுதிய ""பணம் குவிக்கும் பஞ்சகவ்யா'' என்ற நூல் 1 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

இதைத் தயாரிப்பதற்கு முன் நடந்த நிகழ்ச்சியை அந்த நூலில் அவர் விவரித்துள்ளார். ""ஒரு சிவராத்ரியன்று திருப்பாண்டி கொடுமுடி ஈசனை தரிசிக்கச்சென்றேன். ஆராதனங்கள் முடிந்தபிறகு பஞ்சகவ்யத்தை ப்ரஸாதமாக குருக்கள் எனக்கு வழங்கினார். இதை உண்டால் என்ன பலன் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் "வந்த நோய் தீரும்; வரும் நோயைத் தடுக்கும்' என்றார். என்னுள் பொறி தட்டியது. ப்ரேசில் நாட்டுக்காரர் ஆவின் இரு பொருளை மட்டும் பயன்படுத்தி பலன் கண்டுள்ளார். நாம் ஏன் ஆவின் ஐந்தினை பயன்படுத்தக்கூடாது? என்று எண்ணி பஞ்ச கவ்யம் தயாரித்து பயிர்களின் மீது தெளித்தேன். சுமாரான பலன் இருந்தது. அதன்பிறகு பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து தற்போது பஞ்சகவ்யம் தயாரித்து வருகிறேன்.''

மேலும் பஞ்சகவ்யத்தைக் கால்நடைகளுக்கு மருந்தாகக் கொடுத்து அதனால் பல நோய்களை குணமாக்கலாம், பஞ்சகவ்யத்துடன் பாதாம், பிஸ்தா, ஆகியவற்றை சேர்த்து நோயாளிகளுக்கு வழங்கினால் . அவை ஆரம்ப நிலை புற்றுநோய், சர்க்கரைநோய், எய்ட்ஸ், போன்ற பல நோய் களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று தெரிகிறது.

பாரதநாட்டில் பசுக்களின் எண்ணிக்கையும், அவற்றின் இன வகைகளும் வேகமாகக் குறைந்து கொண்டு வருகின்றன. மாதந்தோறும் இலட்சக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாடெங்கும் பசுக்களைக் காக்கும் இயக்கங்கள் செயல்படவேண்டும். பசுக்களைக் காப்பதற்குச் சட்டபூர்வ மான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் .

One response to “கோமாதா எங்கள் குலமாதா”

Leave a Reply