முஸ்லிம் மௌல்விக்களும், கிறிஸ்துவப் பாதிரிகளும் மனித உரிமைகளை மீறி, அடிப்படை வாதத்தை ஊக்குவிக்கும் போது, போலி மதசார்பின்மை வாதிகள் அந்த செயல்களைக் கண்டும் காணமல், கண்ணை மூடிக்கொண்டு இருந்து விடுகின்றனர். இதற்கு ஏதாவது சான்று தேவை என்றால் இதை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. ஸ்ரீநகரில் ஆல் சையிண்ட்ஸ் சர்ச் உள்ளது.

இதில் பாதிரியாக இருப்பவர் கன்னா. இவர் ஏழு முஸ்லிம்களை பலவந்தமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

காஷ்மீரில் ஷரியா நீதி மன்றத்தின் தலைவராக இருப்பவர் முப்தி முஹமது பஷிருதீன். இவர் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று கன்னாவிற்கு "சம்மன்" அனுப்பினார். கன்னா அவரை சந்தித்த போது "தன்னுடைய குற்றத்தை" ஒப்புக் கொண்டதாக "சொல்லப்பட்டது. இந்த முப்தி நிருபர்களிடம் கிருஸ்துவப் பாதிரியின் நடவடிக்கைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று சொன்னார். இதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும். நாங்கள் இது சம்பந்தமாக சொல்லும் நடவடிக்கையை அரசு அமல் செய்ய வேண்டும் என்று அந்த முப்தி மேலும் சொன்னார். அவர் இவ்வாறு சொன்ன 24 மணி நேரத்திற்குள் குறைவான காலத்தில் கன்னாவை சிறையில் அடைத்து விட்டனர். மாநில அரசு முப்தியின் ஆணையை அப்படியே அமல் செய்தது.

இத்தொடர் நிகழ்ச்சிகளில் இருந்து நாம் மூன்று முடிவுகளுக்கு தெளிவாக வரலாம். முதலாவது கிருஸ்துவ சர்ச் பணம் கொடுத்து ஆத்மாக்களை விலைக்கு வாங்கும் வியாபாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வலது சாரி ஹிந்து இயக்கங்கள் இட்டுக் கட்டும் கற்பனை அல்ல இது. இரண்டாவது விஷயம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் பெரும்பான்மையான ஜம்மு காஷ்மீர் மாநிலம் "தாலிபான் மயமாகி வருகிறது". மூன்றாவது விஷயம் காஷ்மீரில் உள்ள அரசியல் தலைமையும், அரசு யந்திரமும் இஸ்லாமிய மௌல்விகளுக்கு கீழ்ப்படிந்துள்ளன. மேலும் இவையனைத்தும் கண்டும் தங்களைத் தாங்களே மதசார்பற்றவர்கள் என்று பறை சாற்றிக் கொள்பவர்கள் அத்தகைய செயல்களை அமைதியாக அங்கீகரித்து வருகின்றனர். முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்துவர்களுக்கு எதிராக அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் (அத்தகைய அத்து மீறல் சம்பவம் உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருந்தாலும் கூட) குய்யோ முறையோ என்று கூச்சல் போடும் கும்பல்கள், இந்த காஷ்மீர் சம்பவங்களைக் குறித்து வாய்மூடி ஊமைகளாக உள்ளனர். இந்தியாவின் இதர பகுதிகளில் இருக்கும் இவர்களிடம் இருந்து காஷ்மீர் சம்பவங்களைக் குறித்து எந்த வித விமர்சனமும் வெளி வரவில்லை. காஷ்மீர் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகியும் அது பற்றி கொஞ்சம் கூட விமர்சிக்காத இவர்கள்தான் மதசார்பற்ற தன்மையின் காவலர்கள்.

இஸ்லாம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஒட்டு மொத்த ஹிந்துக்களை வேட்டையாடி விரட்டி விட்டது. போலி மதசார்பின்மைவாதிகளான காங்கிரஸ் அல்லது சமாஜ்வாடி, அல்லது இடதுசாரி கட்சிகள் இதை எதிர்த்து ஒரு வார்த்தை இன்றுவரை பேசவில்லை. காஷ்மீர் ஹிந்துக்கள் மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு அதற்கு பலிகடா ஆக்கப் பட்டவர்கள். ஆனால் அவர்களுக்குப் புனர்வாழ்வு கொடுத்து கொஞ்சம் நிவாரணம் அளிப்பதைப் பற்றி இந்த அரசாங்கம் எதுவும் பேசவில்லை செய்யவும் இல்லை. ஆனால் இதே மத சார்பற்ற போலிகள் எங்கோ உள்ள பாலஸ்தீனில் நடக்கும் சம்பவங்களை பற்றி அலறிக் கொண்டே இருக்கின்றனர்.

ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பு பாலஸ்தீனியர்களை வழி நடத்தி வருகிறது. அதன் தலைமையில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவை ராக்கெட்டுகள் கொண்டு தாக்குகின்றனர் . இதை எதிர்த்து இஸ்ரேல் பதிலடி கொடுக்கிறது. ஆனால் உடனே இதை எதிர்த்து நம்மூரில் உள்ள போலி மதசார்பின்மைவாதிகள் கூப்பாடு போடுகின்றனர். ஆனால் காஷ்மீர் பண்டிதர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் வடிக்க இவர்கள் தயாராக இல்லை.

2002 இல் குஜராத்தில் மதக்கலவரம் நிகழ்ந்தது. அதில் முஸ்லிம்களின் வீடுகளும் நாசமாக்கப்பட்டன. கோத்ரா படுகொலை காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள் நடந்தன. இதை எல்லாம் எவரும் நியாயப் படுத்தவில்லை. கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாக குஜராத் அரசை போலி மதசார்பின்மைவாதிகள் அக்கலவரத்தைச் சுட்டிக்காட்டியே கழுவில் ஏற்றி வசைபாடி வருகின்றனர். ஆனால் கோத்ராவில் 53 ஹிந்துக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். கோத்ரா நகரில் இருந்த சிலரே இதை செய்தனர். இதன் காரணமாகவே பின்பு கலவரங்கள் நிகழ்ந்தன. ஆனால் இதைப் பற்றி போலி மதசார்பின்மைவாதிகள் ஒரு வார்த்தை கண்டித்துப் பேசவில்லை.

இந்தியாவின் சிவில் சட்டங்களின்படி விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்மணிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்குப் பணிந்து இத்தீர்ப்பை ரத்து செய்தது ராஜீவ்காந்தி அரசு என்பது சமீபத்திய வரலாறு.

ஹிந்துக் கடவுள்களை நிர்வாணமாக ஓவியம் தீட்டுவதில் ஹுசைன் இன்பம் கண்டார். ஆனால் இந்த போலி மதசார்பின்மை வாதிகள் அவருக்கு "கலை சுதந்திரம் உள்ளது" என்று வாதித்தனர். பங்களாதேஷில் ஹிந்துக்கள் படும் அவஸ்தையையும், துயரங்களையும், அவர்கள் அந்நாட்டில் வேட்டையாடப் படுவதையும், தஸ்லிமா நஸ்ரின் தனது லஜ்ஜா என்ற நாவலில் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார். இதற்காக மார்க்சிஸ்ட்கள் அவரை மேற்கு வங்காளத்தைவிட்டே விரட்டியடித்தனர். தஸ்லீமா நஸ்ரினின் பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாக்க எவரும் முன் வரவில்லை. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் பிரதம மந்திரி மன்மோகன் சிங் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்குத்தான் முதல் உரிமை தரவேண்டும் என்று அவர் திருவாய் மலர்ந்து அருளி உள்ளார். வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் அவர் "வகுப்புவாத" பிளவை முன் வைக்கிறார். ஹிந்துக்களில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு இவ்வாறு முன்னுரிமை கிடையாது. ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் உதாரணத்திற்கு ஜம்மு காஷ்மீரில் அவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. நமது போலி மதசார்பின்மை அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்திற்கு இதை விட வேறு சிறந்த உதாரணம் வேண்டுமா?

ஜம்மு காஷ்மீரில் கிருஸ்துவ பாதிரிக்கு நடந்த சம்பவத்தற்கு மீண்டும் திரும்பி வருவோம். ஹிந்துக்களை தங்களுடைய மதத்திற்கு மாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டி ஒரு ஹிந்து கூட்டம் ஒரு முஸ்லிம் மௌல்வியையோ அல்லது ஒரு கிருஸ்துவ பாதிரியையோ அழைத்து பதில் கூறுமாறு கேட்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள்! எல்லா போலி மதசார்பின்மைவாதிகளும் மனித உரிமைவாதிகளும் நரகத்தையே கட்டவிழ்த்து விட்டிருப்பார்கள். இம்மாதிரி அபசாரம் செய்தவர்களின் தலையைக் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் கேட்டு இருப்பார்கள். பாரதிய ஜனதா கட்சி ஆளும் ஏதாவது ஒரு மாநிலத்தில் இவ்வாறு நடந்திருந்தால் கேட்கவே வேண்டாம். நம்முடைய அரசியல் சட்டம் உண்மையான மதசார்பின்மை என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறை செய்துள்ளது. ஆனால் இந்த மதசார்பின்மைவாதிகள் என்று தங்களைத் தாங்களே பறைசாற்றிக் கொள்ளும் இப்போலிகள், மத வெறியர்களைக் காட்டிலும் அதிகமாக "உண்மையான மதசார்பின்மைக்கு" அதிக தீங்கு விளைவித்து உள்ளனர்.

Tags:

Leave a Reply