உலக அளவில், டிராக்டர்கள் தயாரிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய விவசாய துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது அறுவடை இயந்திரங்கள் போன்ற நவீன சாதனங்கள் வேளாண் நடவடிக்கைகளில் பல்வேறு நல்ல

விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன என கூறினார்.

தற்போது நம் நாட்டில் ரூ.60,000 கோடி மதிப்பிற்கு டிராக்டர்கள் விற்பனையாகி வருகின்றன. இந்திய மாநிலங்களில் உத்தரபிரதேசம்தான் டிராக்டர்களுக்கான மிகப் பெரிய சந்தையாக உள்ளது. அதாவது நாட்டில் ஒவ்வொரு நான்கு டிராக்டர்களிலும் ஒன்று உத்தரபிரதேசத்தில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டிராக்டர்கள் ஏற்றுமதியும் சிறப்பான அளவில் நடைபெற்று வருகிறது. இந்திய டிராக்டர்களுக்கு நேபாளத்திலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறப்பான வரவேற்பு உள்ளது.

வேளாண் துறையில் சிறிய மற்றும் மிகச் சிறிய விளைநிலங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன.நம் நாட்டில் விளைநிலங்கள் சுருங்கி வருகின்றன. இதனால் ஏராளமான பண்ணைகள் நலிவடைந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, தனிப்பட்ட ஒரு விவசாயி பெரும் பொருட்செலவில் இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்துவது சாத்தியமில்லாதது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Tags:

Leave a Reply