பகவத் கீதைக்கு தடை விதிக்கும் விவகாரம் தொடர்பாக பா ஜ க ரஷிய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ்க்கு கடிதத்தை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என ரஷியாவில் தடைவிதிக்க கோரி

வழக்கு தொடர்ந்திருப்பது உலகம் முழுவதும் இருக்கும் கோடி கணக்கான இந்துக்களின் உணர்வை புண்படுத்தும்.

யோகா, பக்தி, சுய ஒழுக்கம் மற்றும் மேலான எண்ணங்களை உபதேசிக்கும்_புத்தகமாக கீதை உள்ளது. கீதை தீவிரவாதத்தை ஊக்குவிக்க வில்லை, ரஷ்யாவை நாங்கள் ஒரு நட்பு நாடக தான் கருதுகிறோம். இந்தியா மற்றும் ரஷ்யா அறிவியல் மற்றும் கல்வி, தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், பாதுகாப்பு, அணு சக்தி, தொழில், வர்த்தகம், வரலாறு மற்றும் கலாச்சார_துறையில் ஒத்துழைப்பாக உள்ளது.

இதனை மனதில் கொண்டு இந்த வழக்கில் ரஷி அரசாங்கம் தலையிட்டு நீக்கம்செய்ய வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply