தன்னைக் கொல்வதார்க்கு யாரோ முயற்சி செய்வதாகவும், தன்னை பின் தொடருவதாகவும் மிரட்டுவதாகவும் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள்_கூடுதல் தனிசெயலர் ஆசிர்வாதம் ஆச்சாரி நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறினார்.

தன்னை மிரடும் நபர் நீதிமன்றத்திலிருந்து சற்று முன்புதான் வெளியேறியதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையதொடர்ந்து அவர் அடையாளம் காட்டிய நபரை போலீசார் நீதிமன்ற வளாகத்துகுள்ளேயே பிடித்து நீதிபதியின் முன்பு நிறுத்தினர்.

அவரின் பெயர் ஜெய்ப்ரகாஷ் . இருப்பினும் தனக்கு ஆச்சாரியை தெரியாது தான் அப்பாவி என்று அவர்_கூறினார். இந்நிலையில் அவர் ரிலையன்ஸ்_அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் கிளார்க் என தெரியவருகிறது . இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:

Leave a Reply