அரசு தாக்கல் செய்திருக்கும் லோக்பால் மசோதா, மக்களுக்கு எதிரானதாக உள்ளது. இந்தமசோதாவை வாபஸ் பெற்றுவிட்டு, புதிய மசோதாவை தாக்கல்செய்ய வேண்டும்’ என, அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: கடந்த ஆகஸ்டில்_லோக்சபாவில் தாக்கல்செய்த மசோதாவைவிட,

தற்போது தாக்கல்செய்துள்ள மசோதா, மிக பலவீனமானது. இந்த மசோதாவின் படி, அதிகாரம் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும், லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பது, நீக்குவது தொடர்பான_அதிகாரமும், அரசின்_கட்டுப்பாட்டில் கொண்டு வரபட்டுள்ளது.

ஐந்து சதவீத_ஊழியர்கள் மட்டுமே, லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். பெரும்பாலான அரசியல் தலைவர்கள்,. பெரிய நிறுவனங்கள், மசோதா வரம்பிற்குள் இல்லை. இதன்_மூலம், பொதுமக்கள் அனைவரும், ஊழல்_ நிறைந்தவர்கள் என்றும், அரசியல்வாதிகள் சுத்தமானவர்கள் என்றும், அரசு நினைக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

Tags:

Leave a Reply