முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக கேரளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் இதை வெளிக்காட்டி கொள்ளாமல் கேரள அரசு மறைத்து வருவதாக தெரிகிறது.

தேனி மாவட்டத்தில் இருந்து பால், காய்கறி, ஆடு, மாடுகள் என்று

எதுவுமே கேரளாவுக்கு போகவில்லை அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோன்று சரக்கு லாரிகளும் கேரளாவுக்கு_போகாது என லாரி புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் தெரிவித்துவிட்டது. இதனால் சரக்கு லாரிகளும் கேரளாவுக்கு போகவில்லை.

எனவே காய்கறி விலை விண்ணை_தொட்டுள்ளதாம். ஒரு கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்க்க படுவதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும்கூட அது தான் . பழங்கள், பூக்கள், பால் போன்றவற்றின் விலையும் படுஉயரத்திற்கு போயுள்ளதாம்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோழி இறைச்சிக்கான தேவையும் அதிகரித்துள்ளது , கறிக் கோழிகள் கேரளாவுக்குப் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதுவும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது

Leave a Reply