அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவால், நாட்டின் மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அனல் மின் திட்டங்களின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது. அனல் மின் நிலையங்களில் நிலக்கரிதான்

முக்கிய எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி தேவைப்பாட்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது. எனவே, நிலக்கரியை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 20 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால், இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்.

ரூபாய் மதிப்பு சரிவு, வெளிநாடுகளில் விலை உயர்வு ஆகியவற்றால், சென்ற சில மாதங்களில் நிலக்கரி இறக்குமதி செலவினம் 30-35 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, நிலக்கரி விலை மிகவும் உயர்ந்துள்ளதால், துறைமுகங்களுக்கு வந்து இறங்கியுள்ள நிலக்கரியை எடுத்துச் செல்ல மின் உற்பத்தி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.

கடந்த நவம்பர் வரையிலான நான்கு மாத காலத்தில் துறைமுகங்களில் 1.10 கோடி டன் நிலக்கரி எடுத்துச் செல்லப்படாமல் முடங்கி கிடக்கிறது. இது, புதுடெல்லி உள்ளிட்ட ஐந்து நகரங்களுக்கான மின் தேவைப்பாட்டை ஈடுகட்ட போதுமானதாகும்.ஆக, மின் உற்பத்தி வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply