நாட்டு முன்னேற்றத்தை தடுக்கும்வகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயல்படவிடாமல் வெளிநாட்டு சக்திகள், தன்னார்வதொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து, மக்களை போராட்டத்தில்_ஈடுபடுத்தும் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளன,” என்று ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தென்னிந்திய இணை_அமைப்பாளர் ஸ்தாணுமாலையன் தெரிவித்துள்ளார் .

கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டி: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை, இரண்டு ஆண்டுகள் கொண்டாட, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் முடிவுசெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் பகுதியில், வரும் பிப்.,12ல், தென் தமிழகத்தைச் சேர்ந்த, ஒரு லட்சம் ஆர்.எஸ்.எஸ்., இயக்கதொண்டர்கள் பங்கேற்கும், மாபெரும்_கூட்டம் நடைபெற இருக்கிறது .

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன்பகவத், தமிழகத்திலுள்ள ஆன்மிக பெரியவர்கள் உள்ளிட்ட பலர், இதில் பங்கேற்க உள்ளனர். முல்லை பெரியாறு அணை_விவகாரத்திலும், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் உற்பத்தியை தொடங்கவும் , மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

நாட்டு முன்னேற்றத்தை தடுக்கும்வகையில், வெளிநாட்டு சக்திகள் தன்னார்வ தொண்டு நிறுவனங் களுக்கு நிதியுதவி தந்து , மக்களை போராட்டத்தில்_ஈடுபடுத்தும் சதி செயலில் ஈடுபட்டுள்ளன. மத்திய புலனாய்வு_நிறுவனம், தன்னார்வ தொண்டு_நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து, விசாரணை நடத்தவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply