தமிழர்களின் மீது அக்கறையில்லாதவர் மத்தியமைச்சர் சிதம்பரம்,” என்று பா.ஜ.க , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது :பா.ஜ., ஐந்தாவது மாநில மாநாடு 12 ஆண்டுகளுக்கு பின், ஏப்., 28, 29ம் தேதிகளில் மதுரையில் நடக்கிறது. 2014 வரை மத்திய காங்., ஆட்சி

இருக்குமா, அதற்கு முன்கூட்டியே கவிழுமா என்ற நிலை தற்போதுள்ளது. மக்கள் நலனுக்காக பிரதமர் தமிழகம் வரவில்லை. மத்தியமைச்சர் சிதம்பரத்தின் நலனுக்காக வந்தார். தமிழக நலனுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் சிதம்பரம்.முஸ்லிம்களுக்கு மெக்கா, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் செல்ல சலுகை வழங்கியது போல, இந்துக்கள் கயிலாயம், பத்ரிநாத், கேத்ரிநாத், காசி, ராமேஸ்வரம் செல்ல, சலுகை வழங்க வேண்டும்.

திருமங்கலம் அருகே, அத்வானி செல்லவிருந்த பாதையில், குண்டு கைப்பற்றப்பட்ட வழக்கில், விசாரணை திருப்தியாக இல்லை. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.மதுரைக்கு பெருமை, மீனாட்சியம்மன் கோவில்; மேயர் அல்ல. கோவிலை சுற்றியுள்ள விதிமீறிய கட்டடங்களை இடிக்க வேண்டும். இத்தகைய கட்டடங்களை இடிக்க தடை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால், அது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:

Leave a Reply