லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ள_விதிகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .

ராஜ்யசபாவில் தாக்கலான இந்தமசோதாவின் மீது நடந்த

விவாதத்தில்பேசிய பாரதிய ஜனதா தலைவர் அருண் ஜேட்லி,

லோக்பாலில் சிறுபான்மை யினருக்கு இடஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோத மானது. யாருமே ஏற்க_முடியாத ஒரு லோக்பாலை மத்திய அரசு தாக்கல்செய்துள்ளது.

சிபிஐ யை ஒரு சுதந்திரமான அமைப்பாக இயங்கவைக்கும் வகையில் லோக்பாலில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இப்போதிருக்கும் லோக்பாலின் கீழ், பிரதமரை_விசாரிப்பது என்பது சாத்தியமே இல்லாதது.

பாரதிய ஜனதா வலுவான லோக்பால்_மசோதாவையே விரும்புகிறது. லோக்பாலுக்கு அரசியல்_சட்ட அங்கீகாரம் வழங்கபடுவதை பாரதிய ஜனதா எதிர்க்கவில்லை. லோக்பால் மசோதாவை விளையாட்டு பொம்மையாகவே அரசு பார்க்கிறது, அதைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்

Leave a Reply