வானியலும் ஜோதிடத்திலும் ஒன்பது கிரகங்களுக்கும் 27 நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை காண்கிறோம். 27 நட்சத்திரங்களும் பல்வேறு குணாதியங்களைக் கொண்டது .

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்பது பழைய பழமொழி. ஆண்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அரசாட்சி

செய்வார்கள் என்றும், பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் நிர்மூலம் என்றும் தொன்று ொட்டு இருந்து வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை! ஆஞ்சநேயரின் பிறந்த நட்சத்திரம் மூலம்! எனவே ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் ஆஞ்சநேயரைப்போல நல்ல உடல் வலிமை, மனோ வலிமைப் பெற்றவர்களாக இருப்பார்கள் என்பது ஒரு சாரார் கருத்து.

மூலம் நட்சத்திரத்தை_பொறுத்தவரை “ஆனி மூலம் அரசாளும்” பின் மூலம்_நிர்மூலம என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆனி மாததத்தில் மூல நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அரசு மற்றும் அரசு ொடர்பானவர்களுக்கு நெருக்கமாக_ இருப்பார்கள்; மூலம் நான்காம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள் எதிரிகளை நிர்மூலமா க்குவார்கள் என்பதே அதன்பொருள்.
மேலும் இதற்க்கு வேறு ஒரு விளக்கத்தையும் தருகிறார்கள் , அதாவது மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. இவருக்கு ஞானக்காரகன் என்ற பெயரும் உண்டு. மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நுட்பமான அறிவுத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். நுனிப்புல் மேய்வதுபோல எந்த முடிவும், மேலெழுந்தவாரியாக, எடுக்க மாட்டார்கள். நன்கு தீர்க்கமாக சிந்தித்து முன்யோசனையுடன் செயல்படக் கூடியவர்களாக இருப்பர்.

ஒரு குடும்பத்தின் தலைவர் மாமனார் என்ற நிலையில், அந்தக் குடும்பத்திற்கு மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மருமகளாக வர நேர்ந்தால், அம்மருமகள் மாமனாருக்கு மேல் சிந்தித்து செயல்படுவாராம். அப்போது மாமனாருக்கும், மருமகளுக்கும் தன் முனைப்பு மற்றும் தாழ்வு மனப்பான்மை வந்து விடுமாம். தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு விடுமாம். இதைத் தவிர்க்கவே நமது முன்னோர்கள் சில காரண காரியங்களை பழமொழிகளாகவும், தெய்வ வாக்கு என்கிற பெயரிலும் சொல்லி வைத்தார்கள் என்று கூறுபவர்களும் உண்டு .

உண்மையில் ஆண் மூலம் அரசாளும் என்றால் மூலம் நட்சத்திரத்தில்
பிறந்த ஆண்கள் எல்லாம் அரசு ஆள்கிறார்களா என்ன! அதேபோல பெண் மூலம் நிர்மூலம் என்கின்றனர், ஆனால் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் எத்தனையோ பேர் சாதனையாளராகவும், புகுந்த வீட்டில் பெருமை மிக்க வாழ்க்கை நடத்துவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்! அன்பர்களே! உண்மையை உணர்ந்து செயல் படுவோம்.!

ஆண் மூலம், அரசாளும், பெண் மூலம், நிர்மூலமா ,  ஆண் மூலம் பெண் மூலம் , மூல நட்சத்திரத்தில், பிறந்தால் , அரசாட்சி

Leave a Reply