வங்க கடலோரத்தில் மையம் கொண்டிருந்த “தானே’ புயல் கரையை கடந்தது. கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடந்த போது கடும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.

புயல் மழையால், டெல்டா மாவட்டங்களில், 48 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களின் மதிப்பை கணக்கிட, விவசாயத் துறை அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில், நெற்பயிர்கள் காற்றில் சாய்ந்தும், சில பகுதிகளில் நீரில் மூழ்கியும் உள்ளன.

திருவாரூர், நாகை, தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில், 3 லட்சத்து 45 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களில், 48 ஆயிரத்து 420 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதுவரை, வேளாண் துறைக்கு வந்த தகவல்படி, கடலூர் மாவட்டத்தில் தான், பெருமளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

Tags:

Leave a Reply