காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு இந்து மகா சபை சார்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே இயக்கவும், மக்கள் விரோதப் போராட்டத்தைத் தூண்டிவிடும் சக்திகளை கைது செய்ய வேண்டும், சிங்கப்பெருமாள் கோயில் தென்மேல்பாக்கம் அருகில் கொண்டமங்கலம், மேட்டுப்பாளையம், தாசரிகுப்பம்,

அனுமந்தபுரம், சிறுங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கிடையிலான பஸ் போக்குவரத்தை உடனே இயக்க வேண்டும்.பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன் உடனே ஜாதிச் சான்றிதழ் வழங்கவும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய மக்கள் பயனடையும் வகையில் கொண்டமங்கலம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உடனே அமைக்கக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து மகா சபை அமைப்பின் காஞ்சி மாவட்டச் செயலர் என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். வி.ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ÷மாநிலத் தலைவர் வீர்.வசந்தகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்

Tags:

Leave a Reply