தவறுசெய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக அகில இந்திய துணைதலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ளன. அப்படி இருந்தும் அளவுக்கு

அதிகமாக உள்ள முதல்வர் மாயாவதி படங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டுகளும் போஸ்டர்களும் இன்னும் அகற்றப்படவில்லை. அதனால் இது தொடர்பான அரசு அதிகாரிகள் மீது தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாயாவதி படம் உள்ள பெரிய அளவிலான பிளக்ஸ் போர்டுகள் அரசு செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிளக்ஸ் போர்டுகளை அகற்றாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மாயாவதி சிலைகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த முக்தர் அப்பாஸ் நக்வி, பகுஜன்சமாஜ் கட்சியின் யானை சின்னம் பல இடங்களில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

Tags:

Leave a Reply