2ஜி ஒதுக்கீடு_ விவகாரத்தில் முன்னாள் மத்தியஅமைச்சர் தயாநிதி மாறனு க்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யபட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து விளக்கம் தருமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் வியாழக் கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிபிஐ இயக்குநர் மற்றும் சட்டஅமைச்சர் சல்மான்குர்ஷித் போன்றோரின் தலையீட்டின் காரணமாக எஸ்ஷார் டெலிஹோல்டிங்ஸ், லூப்டெலிகாம் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் குற்றம்சாட்ட படவில்லை என கூறி தன்னார்வ_அமைப்பு மனுதாக்கல் செய்திருந்தது.

மனுதாரரின் சார்பாக ஆஜரான மூத்தவழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், “சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களின் மீதும் ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான ஆதாரங்கள்_இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் நீதி மன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து இருக்கின்றனர். ஆனாலும் அந்த இரண்டு நிறுவனங்களின் மீதும் சிபிஐ ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்யவில்லை. இது முரண்பாடாக இருக்கிறது இதை ஏற்றுகொள்ள முடியாது’ என வாதிட்டார்.

இதைதொடர்ந்து , இந்த மனுவை விசாரனைசெய்த நீதிபதிகள், இந்தகுற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்து நாள்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளனர்

Tags:

Leave a Reply