ஸ்ரீராம் சேனாவுடன் தங்களுக்கு எவ்விதமான தொடர்புமில்லை என்று ஆர்.எஸ்.எஸ்., மறுப்பு கூறியுள்ளது . கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தாலுகா அலுவலகம்_ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாகிஸ்தான் கொடியேற்றபட்ட சம்பவம்தொடர்பாக ஸ்ரீராம்சேனா அமைப்பைசேர்ந்த ஆறு இளைஞர்கள் கைதுசெய்யப்ட்டனர்.

இந்நிலையில் ஸ்ரீராம் சேனாவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் தொடர்பிருப்பதாக செய்திகள்வெளியாகின. இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய கர்நாடகமாநில ஆர்எஸ்எஸ்., மூத்த_நிர்வாகி கோபால், ஸ்ரீராம் சேனாவின் செயல்பாடுகளுக்கு ஆர்எஸ்எஸ்., எந்த விதத்திலும் பொறுப்பாகாது, தேசவிரோத செயல்களில் ஈடு படுபவர்களுடன் தனிபட்ட முறையிலோ, அமைப்பு ரீதியிலோகவோ , நேரடியாகவோ (அ) மறை முகமாகவோ ஆர்எஸ்எஸ்.க்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply