கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கு விரும்பினால் அவர்கள் தாராளமாக வெளியேறி கொள்ளலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : இரு கட்சிகளைச்சேர்ந்த மாணவர் சங்கத்தினர் இடையே நடந்த

மோதலின்போது ராய்கஞ்ச் கல்லூரியின் முதல்வர் மீதான தாக்குதல் சம்பவம் துரதிருஷ்ட வசமானது. ஆனால் இதை காங்கிரஸ் பூதாகரமாக்கி வருகிறது. இந்த சம்பவத்திற்கு முழு காரணம் திரிணமூல் காங்கிரஸ் தான் என மார்க்சிஸ்ட் கட்சியுடன் சேர்ந்துகொண்டு பொய்பிரசாரத்தை பரப்பிவருகிறது. இ மார்க்சிஸ்ட்டுடன் இணைந்து செயல் படுபவர்களுக்கு எங்கள் கூட்டணியில் இடம் இல்லை. கூட்டணியைவிட்டு காங்கிரஸ் எப்போது வேண்டு மானாலும் வெளியேறிகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply