ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லையாம் இதை சொன்னது அந்த கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தான் .

அடிக்கடி காமடி செய்வதில் வல்லவரான ராகுல் காந்தி இப்போது புதிதாக இந்த காமடியை செய்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய குஷ்வாஹாவை ஊழலுக்கு எதிராக பிரசாரம்

செய்யும் பாஜக தனது கட்சியில் சேர்த்துகொண்டுள்ளது . ஆனால் ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார் .

இப்படி ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லை என்பது நல்ல செய்திதான் ஆனால் உங்கள் கட்சியில் பெரும்பாலனவர்களை நீக்கியகனுமே ? போபர்ஸ் ஊழல், 2ஜி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், எல்.ஐ.சி. பங்குச் சந்தை முதலீட்டு ஊழல், வீட்டுக் கடனிற்கு இலஞ்சம் பெற்ற ஊழல் இப்படி ஊழல் செஞ்சவங்கள் எல்லாம் உங்க கட்சியிலதானே இருக்காங்க .

பாஜக ஊழலுக்கு எதிரான கட்சி என்பதால் தான் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை (ஊழல் குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்க படவில்லை ) கட்சியில் சேர்க்கும் போது கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் சுதந்திரமாக தங்கள் கருத்தை பதிவு செய்கிறார்கள் , இறுதியாக கட்சி தலைமை முடிவு செய்யும். ஆனால் உங்கள் கட்சியில் இதை போன்று கருத்து தெரிவிக்க யாருக்கும் தகுதி உண்டா

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply