அடுத்த இருபது ஆண்டுகளில், இந்தியா பொருளாதார வலிமையில் உலகில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது அடுத்த 20 ஆண்டுகளில் பொருளாதார

வலிமையில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் இருக்கும். 9 சதவீத உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும். தற்போது வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது உண்மைதான். ஆனால், வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு இந்தியாவிற்கு மட்டுமல்ல. ஏனென்றால், உலக பொருளாதாரமே பாதிப்படைந்துள்ளது” என்று கூறினார்.

Leave a Reply