உ.பி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மத்திய_சட்ட அமைச்சர் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தருவது தொடர்பாக கொடுத்தவாக்குறுதி சர்ச்சையை கிளப்பியுள்ளது .

உ .பியில் பரிக்கா பாத் தொகுதியில் சட்ட_அமைச்சர் குர்ஷீத்தின் மனைவி லூயிஸ் குர்ஷீத் போட்டி யிடுகிறார். இவருக்கு ஆதரவாகபேசிய அமைச்சர் இஸ்லாமியர்களுக்கு 6 முதல் 9 சத

வீதம்_வரை இடஓதுக்கீடு கிடைக்க ஆவனசெய்வோம் என்று தெரிவித்துள்ளார். இதுதேர்தல் சட்ட விதி முறைக்கு எதிரானதாகும் , இட_ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என பாரதிய ஜனதா தேர்தல்கமிஷனிடம் புகார் செய்துள்ளது .

இது குறித்து பாரதிய ஜனதா செய்திதொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்ததாவது தேர்தல்_நேரத்தில் ஒரு அமைச்சர் இவ்வாறுபேசுவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒரு குறிப்பிட்ட வர்களது ஓட்டுக்களைபெற்று அரசியல் ஆதாயம் பெற முயற்சிசெய்கின்றனர் என்றார். இதனை தொடர்ந்து சட்ட அமைச்சருக்கு தேர்தல்கமிஷன் நோட்டீஸ் அனுப்பலாம் என எதிர்பாக்க படுகிறது

Leave a Reply