பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று சென்னை_வருகின்றனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில், துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு_விழா இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக, இன்று பகல் ஒரு மணிக்கெல்லாம்

அத்வானி சென்னை வருகிறார். இதேவிழாவில் பங்கேற்பதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் , தனி விமானம் மூலம் மாலை 5 மணிக்கு சென்னைவருகிறார். விமான நிலைய திலிருந்து நேராக போயஸ் கார்டன் செல்லும் இருவரும், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின் , மறைந்த சுகுமாறன் நம்பியாரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்_கூறுகின்றனர் . இதைதொடர்ந்து, துக்ளக் விழாவில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பு கின்றனர்.

Leave a Reply