இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தைத்திங்கள் முதல் நாளாம் தமிழர்களின் பொங்கல் நன்னாளில் நாடு செழிக்கவும் தமிழர் தம் வாழ்க்கை சிறக்கவும் எனது பிரார்த்தனைகளையும் தழிழக பாரதிய ஜனதா கட்சியின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் அழிக்கப்பட்டு வரும் விவசாயத்தை காக்கவும் கிராம பொருளாதாரத்தை மேம்படச் செய்யவும் தமிழகத்தின் நதி நீர் உரிமைகளை நிலை நிறுத்தவும் இலங்கை முதல் உலகின் அனைத்து பல நாடுகளிலும் உரிமையை இழந்து வாடும் நம் தமிழ்ச் சமுதாயத்தின் உரிமைகள் மீட்கப்படவும் நம் தமிழ் கலாச்சாரத்தை காத்திடவும் தமிழகத்தில்ஊழலற்ற நிர்வாக திறன் மிக்க நல்லாட்சி அமைந்திடவும் இந்த பொங்கல் திருநாள் வழி திறந்து, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழியை மெய்ப்பிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவற்றை அடையும் வகையில் அயராது உழைத்திட நம் தமிழ்ச் சமுதாயம் முன் வரவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Tags:

Leave a Reply