தனது பிறந்ததேதியை ஏற்காததால் அரசுக்கு எதிராக , ராணுவ தளபதி வி.கே.சிங், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாட்டின் ராணுவ தளபதியாக இருக்கும் , விகே.சிங் பிறந்த தேதியில் சர்ச்சை நிலவி வருகிறது . இவரது பள்ளி சான்றிதழில் பிறந்ததேதி, 10.5.51 என உள்ளது , இவரை தேசிய_பாதுகாப்பு அகடமிக்கு

தேர்வுசெய்ய, யு பி எஸ்.சி., நடத்திய நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தில், 10.5.50 என குறிப்பிடபட்டுள்ளது.எனினும், தன் பிறந்ததேதி, 10.5.51 என, வி.கே.சிங் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், இவரதுகருத்தை ராணுவ அமைச்சகம் ஏற்றுகொள்ளவில்லை . இதைதொடர்ந்து, விகே.சிங், வரும் மே, 31ல் ஓய்வு பெறவேண்டியுள்ளது. தன் பிறந்த தேதியை ஏற்கமறுக்கும் பாதுகாப்பு அமைச்சக செயலை எதிர்த்து, விகே.சிங். சுப்ரீம் கோர்ட்டில் ரிட்மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags:

Leave a Reply