குஜராத் முதல்வருக்கு எதிரான நீதிமன்ற அவ மதிப்பு மனுவை அந்தமாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “மாநில லோக் ஆயுக்த விவகாரம்தொடர்பாக பிரதமருக்கு எழுதிய_கடிதத்தை குஜராத் முதல்வர் மோடி பகிரங்கமாகவே வெளியிட்டார்.

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது

அவர் பிரதமருக்கு கடிதம்_எழுதியதும் தவறு வெளியிட்டதும் தவறு’ என பிக்காபாய் ஜெத்வா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர் . வழக்கு நிலுவையில் உள்ள போது முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது தவறில்லை. இதில் நீதிமன்ற_அவமதிப்புக்கோ, நோட்டீஸ் அனுப்புவதற்க்கோ எந்த முகாந்திரமும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடிசெய்தனர்.

Tags:

Leave a Reply