ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வர்களுக்கு பிரதமர் நற் சான்றிதழ் தந்திருப்பதால் மத்திய அரசு நம்பக தன்மையை இழந்து விட்டது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது; எதிர்கட்சிகளுடன் இணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அரசின்கடமை. மத்திய அரசில் இரண்டு வகையான

அமைச்சர்கள் இருக்கின்றனர் . ஒரு வகையினர் ஆணவத்துடன் செயல் படுகின்றனர். மற்றொரு வகையினர் சிடு சிடுப்புடனேயே இருக்கின்றனர் . எதிர்க்கட்சியினர் இவர்களிடம் எப்படி பேச முடியும்? எதுவுமே செய்வ தில்லை என்று முடிவெடுத்து விட்ட மத்திய அரசுடன் எதிர்கட்சிகள் எப்படி ஒத்துழைக்க_முடியும்? எதிர் கட்சிகளுடன் கருத் தொற்றுமை என்பது ஒருபக்கம் இருக்கட்டும் , ஆளும் கூட்டணிக்குள் கருத் தொற்றுமை இருக்கிறதா என்பதை பிரதமர்ரிடம் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply