கல்வி வியாபார பொருளாக இருக்க இயலாது என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார் .

ஒரு நிகழ்ச்சிகளில் அவர் பேசியதா வது: மிகபெரிய கட்டடமோ, அதிக அளவு வசதிகளோ, பிரமாண்டமான விளம்பரங்களோ தரமான கல்வியை தராது . விரும்ப கூடியதாக அமைந்ததும், அர்ப்பணிப்பு உணர்வு உடைய ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை தர முடியும்.

சிறந்த பாடதிட்டம், சிறபான ஆசிரியர்கள், மாணவர்கள்- பெற்றோர்கள்-ஆசிரியர்களிடையேயான இணக்கத்தை உருவாக்குதல ஆகியவற்றின் மூலமாக தொடக்க நிலையிலேயே கல்வி தரப்பட வேண்டும். சிறந்த தொழில் நுட்பங்களை கல்வி நிறுவனங்கள் அறிமுகபடுத்த வேண்டும்.

கல்வி மூலமாக மாணவர்களது திறமைகளை அதிகரித்தோம் என்றால் அது எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கைக்கும், தேசத்தின் முன்னேற்றத்திறக்கும் பயனுடையதாக அமையும்.

புதுமைவிரும்பல், ஆராய்ச்சி மனப்பான்மை, நவீன தொழில் நுட்பத்தை கையாளும் திறன், தொழில் திறன் தலைமை பண்பு, நெறி முறை சார்ந்த தலைமைபண்பு போன்றவற்றை தொடக்க கல்வியிலேயே மாணவர்களுக்கு புகட்டவேண்டும். இந்த குணங்களை வளர்த்தால் சுயகட்டுப்பாடுள்ள, வாழ் நாள் முழுவதும் கற்கும் ஆர்வ முள்ளவர்களாக மாணவர்களை உருவாக்கமுடியும் என்று தெரிவித்தார்

Leave a Reply