தன்னை “வெளியில் இருந்து வந்தவர்’ என காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தெரிவித்ததற்கு உமா பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் , யார் வெளியில் இருந்து வந்தவர் , மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் குருவான திக் விஜய் சிங்கை “மண்ணை கவ்வ வைத்ததை போன்று உ பி யிலும் காங்கிரஷை மண்ணை கவ்வ வைப்போம் என உமா பாரதி தெரிவித்துள்ளார் .

மத்திய பிரதேசத்திலிருந்து வந்த உமாபாரதி, உபி தேர்தலில் போட்டியிடுகிறார் என தேர்தல் பிரசாரதின்போது ராகுல்காந்தி மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த உமாபாரதி, “அடுத்தவரை வெளியாள் என கூறுவதற்கு முன்பாக தனது தாய் சோனியா காந்தி எங்கிருந்து வந்தார் என்பதை ராகுல் நினைக்க வேண்டும். இத்தாலியிலிருந்து வந்த சோனியாவை இந்தியர்கள் ஏற்றுகொண்டிருக்கிறார்கள். நான் பக்கத்து மாநிலமான மத்திய பிரதேசத்திலிருந்து தானே வந்துள்ளேன் ‘ என்றார்.

{qtube vid:=_wrq1it-uwQ}

Leave a Reply