அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களில், மத்திய அரசு அதிகாரிகள் ரெய்டுநடத்தி முடித்து டில்லி திரும்பினர். தொண்டுநிறுவனத்திற்கு வந்த வெளிநாட்டு பணம் தொடர்பான , கத்தை, கத்தையாக ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர்.

தொண்டு நிறுவனத்தின் மூலமாக அணு எதிர்ப்பாளர்களுக்கு பணம் வருவதாக ஆரம்பத்திலிருந்தே புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது , இந்நிலையில் தூத்துக்குடி மறை_மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் அலுவலகத்தில் சோதனை_நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மாப்பிள்ளை யூரணி அகதிகள் முகாமுக்கு, கழிவறை கட்டி தந்ததாக காட்டப்பட்ட கணக்குஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிசெய்ததாக சொல்லபட்ட கணக்கு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர் . இதில், வெளிநாட்டு பணம் குறித்த_முக்கிய ஆவணங்களும் கிடைத்துள்ளதாக தெரிகிறது .

Tags:

Leave a Reply