நாகை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர், பொதுச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் 19.01.2012 அன்று மாலை 4.00மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.வரதராஜன் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு.கே.ராஜேந்திரன் மற்றும் மாநிலச் செயலாளர் திரு.கருப்பு(எ)எம்.முருகானந்தம் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

மாநில விவசாய அணி தலைவர் கோவி.சேதுராமன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில் பாலு கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருச்சி விவசாய அணி சார்பாக நடைபெற இருக்கும் மாநாடு சம்மந்தமாகவும் அதிக எண்ணிக்கையில் நாகை மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் அமைப்பு ரீதியான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரத்தலைவர் முட்டம் செந்தில் நன்றி உரை வழங்கினார்.

இப்படிக்கு எஸ்.எஸ்.விஜய்

Leave a Reply