கேரள முன்னாள் முதல்- மந்திரி விஎஸ். அச்சு தானந்தன். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான இவர் பதவியில் இருந்த போது இவரது உறவினரும், முன்னாள் ராணுவ வீரருமான சோமன் என்பவருக்கு 2.33 ஏக்கர் அரசு நிலத்தை மானிய விலையில் ஒதுக்கீடு செய்தார். இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது.

மேலும் இவ்வழக்குக்கு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். இதில் அச்சுதானந்தனுக்கு எதிராக பல ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளது. குறிப்பாக அச்சுதானந்தனின் உறவினர் சோமனுக்கு நிலம் ஒதுக்கப்படும் முன்பே முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் ஒதுக்கீடுக்காக காத்திருந்தனர்.

மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் எழுதப்பட்ட பதில் கடிதங்களில் தற்போது மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கும் அளவுக்கு போதுமான நிலம் இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் அச்சுதானந்தன் உறவினர் சோமனுக்கு மட்டும் அரசு விதிகளை மீறி நிலம் வழங்கி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு வழக்குக்கு தேவையான மேலும் சில ஆதாரங்களை திரட்டும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவை கிடைத்ததும் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.

Tags:

Leave a Reply