கூடங்குளம் அணு மின்_நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவுக்கு வெளி நாட்டிலிருந்து பெருமளவில் நிதி வந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கபட்டுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனியிலிருந்து இந்த நிதி அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிதியை கேரளாவில் உள்ள மீனவர் சங்கம் மூலம் கூடங்குளம் போராட்ட

குழுவுக்கு விநியோகித்துள்ளனர். இதன் மூலம் கூடங் குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கேரளாவின் பங்கும் முக்கியமாக அமைந்திருப்பது தெரிய வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கும் இருப்பதும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து ஜெர்மனியில் உள்ள ரெய்னர்ஹேர்மான் என்பவருக்கு பணம் போகிறது. அவர் அங்கிருந்து_கேரளாவில் உள்ள ஒரு மீனவர் அமைப்புக்கு பணத்தை அனுப்பிவைக்கிறார். இந்த பணத்தை உதயக் குமார் தலைமையிலான போராட்டகுழு உள்ளிட்ட பல்வேறுதொண்டு நிறுவனங்களுக்கு விநியோகிக் கிறார்கள் என்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. இது தொடர்பான மேலும் சில முக்கியதகவல்களை மத்திய உள் துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது. அது உறுதியாக தெரிந்தவுடன் இந்த நிதி கட்டமைப்பு_குறித்த முழு விவரங்களையும் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் இந்த நிதியை பெறும் பலதொண்டு நிறுவனங்கள் அதை வட்டிக்குவிட்டு வரும் அதிர்ச்சித் தகவலும் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. முன்பு சொந்த காசை கொண்டு தான் கூடங் குளம் மக்கள் போராடி வருகிறார்கள் என உதய குமார் கூறியிருந்தார். ஆனால் தற்போது போராட்ட குழுவினர் கேரளாவில் உள்ள மீனவர்_அமைப்புகளிடமிருந்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது. இந்த பணம் வெளி நாட்டு பணம் என்பதும் நிரூபணமாகி யுள்ளதால் புதியதிருப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply