2ஜி ஊழல் வழக்கில் மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரதுக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

2ஜி ஒதுக்‍கீடு நடை பெற்ற காலத்தில் நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தையும் குற்றம் சாட்டபட்டவர்களின் பட்டியலில்

சேர்க்‍கவேண்டும் என கோரி, சாமி வழக்‍கு தொடர்ந்துள்ளார். சாமி தாக்கல்செய்த மனுவில், சிதம்பரத்தின் ஒப்புத லுடனேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்‍கீட்டில் விலைநிர்ணயம் போன்ற பல முடிவுகள் எடுக்‍கபட்டன என்றும், இது தொடர்பாக முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சரை , சிதம்ரபரம் பல முறை சந்தித்து பேசியுள்ளார் என தனதுமனுவில் கூறியுள்ளார்.

மேலும் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு அமைப்புகளுடன்_தொடர்பிருப்பதாக மத்திய உள் துறை அமைச்சகதால் எச்சரிக்‍கபட்டிருந்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்‍கு லைசென்ஸ் வழங்கியதன் மூலமாக நாட்டின்_பாதுகாப்புக்‍கு சிதம்பரம் குந்தகம் ஏற்படுத்தி யுள்ளார் என சுப்பிரமணிய சாமி தனது மனுவில்குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply