அரசியல்வாதியும் நடிகருமான சிரஞ்சீவி தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ரூ.1000ம் கோடிக்கு காங்கிரஸிடம் விற்று விட்டார் என ஆந்திரவின் முன்னாள் முதல்வர் என்டி.ராமா ராவின் மகனும் , தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா குற்றம் சுமத்தியுள்ளார்.

சிரஞ்சீவி என்.டி.ஆர். என தன்னை நினைத்து கொண்டு செயல் படுகிறார். எனது தந்தை மக்கள்செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். அவருடன் சிரஞ் சீவியை ஒப்பிட்டு பார்க்கவேமுடியாது.

ஆந்திர மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையே அர்ப்பணித்தவர் என்.டி.ஆர் ஆனால் சிரஞ்சீவியோ தனது கட்சியை ரூ.1000கோடிக்கு காங்கிரஸிடம் விற்று விட்டார். அவரின் செயல் ஆந்திர மக்களிடையே வெறுப்பை உருவாக்கியுள்ளது என்றார் .

Tags:

Leave a Reply