சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரியில் மாபெரும் நிகழ்வு ஒன்று நடக்க இருக்கிறது. ஆர் எஸ் எஸ் பேரியக்கத்தின் மாநில அளவிலான கூடுதல் (பிராந்த சாங்கிக்) மற்றும் பிரம்மாண்டமான இந்து சங்கமம்.

இதில் 25,000 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களையும் சேர்த்து மொத்தம்

ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நாள்: பிப்ரவரி 12 (ஞாயிறு) மாலை 5 மணி.
இடம்: ராம்கோ காற்றாலை பண்ணை, குமாரபுரம் – காவல்கிணறு ஜங்சன், கன்யாகுமரி மாவட்டம்.

இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு அரு.இராமலிங்கம் அவர்கள் தலைமை வகிக்கிறார். ஆர் எஸ் இயக்கத்தின் அகில பாரத தலைவர் போற்றுதலுக்குரிய திரு. மோகன்ஜி பாகவத் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.

அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்து ஒற்றுமையையும், தேசபக்தியினையும் வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த உன்னத நிகழ்ச்சிக்கு இந்து தர்மத்தின் பல்வேறு துறவிகளும், சமயாசாரியர்களும் தங்கள் அருளாசியை வழங்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஏற்பாடுகளுக்கு உறுதுணை செய்யும் வகையிலும் ஒரு சீரிய வரவேற்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் தொழிலதிபர்கள், சமூகத் தலைவர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள் என்று பல்வேறு வகைப்பட்ட சமூகப் பிரமுகர்கள் உறுப்பினர்களாக பங்கேற்றுள்ளனர்.

Tags:

Leave a Reply