ஆபாசபட விஷயத்தில் காங்கிரஸ் சில்லறைதனமான அரசியலில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் சதானந்த கெளடா குற்றம்சுமத்தியுள்ளார் .

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது : காங்கிரஸ்டமிருந்து அறநெறியை நாங்கள் கற்றுகொள்ள வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸ் தலைவர்கள் தொடர் புடைய சம்பவங்களை என்னால்

உதாரணமாக காட்டமுடியும். ஆபாசபட விவகாரத்தில் அமைச்சர்கள் மூவரும் தாமாக முன்வந்து தங்களது பதவியை ராஜிநாமாசெய்துள்ளனர்.

இவை தொடர்பான விசாரணையையும் அவர்கள் கோரி உள்ளனர்.இவை தொடர்பாக ஆய்வு செய்ய பேரவை விசாரணைகுழு அமைக்கபட்டுள்ளது. விசாரணைகுழுவின் அறிக்கை கிடைக்கும்வரை காங்கிரஸ் தலைவர்கள் காத்திருக்கவேண்டும்.இந்த விஷயத்தில் காங்கிரஸ் சில்லறை அரசியலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தினார் .

Tags:

Leave a Reply