உபி சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சி மதவாத ரீதியில் அணுகுவதாக அத்வானி தெரிவித்துள்ளார் . இதர பிற்பட்ட_வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 41/2 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. உத்தரபிரதேச தேர்தலையொட்டியே என்று தெரிவித்துள்ளார் ,

தனது இணையதளத்தில் மேலும் அவர் அவர் கூறி இருப்பதாவது:-

உபி சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத வகையில் மத ரீதியிலும், உணர்வு ரீதியிலும் அணுகுகிறது. இதை நிரூபிப்பதற்கு சல்மான் குர்ஷித் விவகாரத்தை மட்டுமே நான் உதாரணமாக குறிப்பிடவில்லை. தீவிரவாதிகளுடனான பாட்லா ஹவுஸ் என்கவுன்டரை, போலி என்கவுன்டர் என்று திக்விஜய் சிங் கூறியது மற்றொரு உதாரணம் ஆகும். (இது டெல்லி ஜாமியா நகரில் உள்ள பாட்லா ஹவுசில், தடை செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டதாகும்).

சல்மான் குர்ஷித் தேர்தல் கமிஷனுக்கு அடங்க வெளிப்படையாகவே மறுத்துவிட்டார். இதனால் தேர்தல் கமிஷன், ஜனாதிபதிக்கு புகார் செய்கிற அளவுக்கு நிலைமை போனது கவலை அளிக்கிறது. பின்னர் சல்மான் குர்ஷித் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார். உத்தரபிரதேசத்தில் எனது தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங் தனது மந்திரிகளை அடக்கி வைக்க வேண்டும், சல்மான் குர்ஷித்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஆனால் சல்மான் குர்ஷித் மந்திரி பதவியில் இன்னும் தொடர்கிறார். அதே போன்று இப்போது பெனிபிரசாத் வர்மா பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் தேர்தல் கமிஷன் இப்போது அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. சல்மான் குர்ஷித் செய்தது போன்றே பெனி பிரசாத் வர்மாவும் செய்கிறார், பதவிநீக்கத்தில் இருந்து தப்புகிறார்.

அப்படியென்றால், இத்தகைய கருத்துக்களை (முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பானவை) அரசியல் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனுக்கு அடங்காமல் இவர்கள் பேசி வருவது என்பது தனிப்பட்ட ஒருவரின் கருத்துகளாக இருக்க வாய்ப்பில்லை, (காங்கிரஸ்) கட்சியின் தேர்தல் நிர்வாகிகளால் தேர்தலுக்காக திட்டமிட்டு நடத்தப்படுகிற சதியாக இருக்கலாம் என்று டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜெட்லி எழுப்பிய சந்தேகம் உண்மையோ என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

சல்மான் குர்ஷித்தின் கருத்துகளிலிருந்து காங்கிரஸ் கட்சி தன்னை அன்னியப்படுத்தி கொண்டாலும் கூட, சோனியா குடும்பம் அப்படி செய்யவில்லை. அந்த குடும்பத்தின் இளைய வாரிசு பிரியங்கா காந்தி சல்மான் குர்ஷித்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்
என்று அவர் கூறி உள்ளார்.

Tags:

Leave a Reply