இந்தியா 2020 இல் தனது இலக்கை அடைய கிராமப்புற வளர்ச்சியில் கவனம்செலுத்த வேண்டியது முக்கியமாகும், மாணவர்களின் எண்ணங்கள் திசை மாறாமல் இருக்க பெரிய_இலக்கை நோக்கி செயல்படவேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே.அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் .

மாணவர்களுடனான கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் மேலும் அவர் தெரிவித்ததாவது; கடந்த 60 ஆண்டு கால அனுபவத்தில் சில விஷயங்கள் என்னை ஈர்த்துள்ளன. தற்போதைய உலக மயமாக்கல் கொள்கையால் அறிவு மட்டுமே நாடு_மற்றும் சமுதாயத்தின் சக்தியாக திகழ்கிறது.

இந்தியா-2020 எனும் பார்வையில், தற்போதிருக்கும் இளைய தலைமுறைக்கு புதிய சவால்கள் காத்துகொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக கனவு காணும் போதுதான் இலக்கை_அடைவதற்கான அறிவை பெற்று இலக்கை அடையமுடியும்.

மாணவர்களின் எண்ணங்கள் திசை மாறாமல் இருக்க பெரிய_இலக்கை நோக்கி செயல்படவேண்டும். இந்தியா 2020 எனும் பார்வைக்காக, நாம் ஒரு சில இலக்குகளை அடைந்திருப்பினும் கிராமப்புற வளர்ச்சியில் அதிக_கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

Tags:

Leave a Reply