தீவிரவாத தாக்குதல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கண்காணிப்பு கேமராக்ககளின் பங்கு மிகவும் முக்கியமானது. பொது மக்கள் அதிகம் நடமாடும் ரயில், விமான மற்றும் பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள், அரசு, வங்கி மற்றும் காப்பீட்டு

நிறுவன அலுவலகங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்களுடன் இணைந்த தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இவற்றின் விற்பனை அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,200 கோடியாக உயரும் என்று அசோசெம் தெரிவித்துள்ளது.

இந்த கேமராக்கள் அசம்பாவிதங்கள் நடக்கும்பட்சத்தில் விசாரணைக்கு மிகவும் உதவியாக உள்ளது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மெத்தன போக்குகளையும் அடையாளம் காட்டுவதில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Leave a Reply