மந்திரவாதிகளின் ஆதிக்கம் இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உண்டு நோய் ஏற்பட்டால் மக்கள் மருத்துவமனைக்கு செல்வதைவிட மந்திரவாதிகளை தேடிசெல்வதே அதிகம். இந்நிலையில் தான்சானியா நாட்டில் மந்திரவாதிகள் ஆறு பெண்களை நரபலிகொடுத்து பூஜை செய்துள்ளனர்.

அந்த ஆறு பெண்களையும் துண்டு_துண்டாக வெட்டி அவர்களின் உடல்

உறுப்புகளை எடுத்துசென்று இந்த பூஜைகளை செய்திருக்கிறார்கள். மனித உறுப்புகளை_வைத்து பூஜைசெய்தால் பணக்காரர்கள் ஆகலாம் எனும் நம்பிக்கை தான் சானியாவில் பலரிடம் இருக்கிறது .இந்த விஷயம் வெளியானதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வன் முறையிலும் குதித்தனர் . அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதில் 2பேர் கொல்லபட்டனர்.

Leave a Reply