சங்கரன் கோவில் இடை தேர்தலில், பா.ஜ.க மன பலத்துடன் களமிறங்கி உள்ளதால் , வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் .

சங்கரன் கோவில் இடை தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள், தேர்தல்வெற்றிக்கு பிறகு தன் நலனையே பெரிதாக கருதுகின்றன . தேர்தலுக்கு பிறகு, மக்களுக்கு அந்த கட்சிகளின் மேல் வெறுப்பு உருவாகும் நிலையே உள்ளது.

இந்த இடைதேர்தலில், உண்மையாக மக்கள் நலனுக்காக உழைப்பவர்களுகே மக்கள் வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர். பண பலத்துடன் களமிறங்கும் அரசியல்கட்சிகளுக்கு மத்தியில், மன பலத்துடன் பா.ஜ. க களம் காண்கிறது. இந்த தேர்தலில், பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply