லஸ்கர்-இ-தய்பா தீவிரவாத இயக்கம் டெல்லியில் பயங்கர குண்டுவெடிப்புகளை நிகழ்த்த மேற்கொண்டிருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டு தீவிரவாதிகள் கைது செய்யபட்டுள்ளதாக உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார் .

இது தொடர்பாக உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் மேலும் தெரிவித்ததாவது , எந்த தலைவரையும் குறிவைத்து இந்த

தாக்குதல் திட்டமிடபடவில்லை. அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களை குறிவைத்தே தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடபட்டுள்ளது. மத்திய புலனாய்வு துறையும், காவல் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தான் முழுவிவரமும் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply