கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினின் 60-வது பிறந்த நாளையொட்டி தென் சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசியதாவது:

திமுக. ஆட்சியில் மின்தட்டுப்பாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக

இருந்தது உண்மைதான் . மின் தட்டுப்பாட்டை போக்க தில்லிக்கு_அலைந்து, பல மாநில அரசுகளோடு தொடர்புகொண்டு மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டுவந்து, மக்களை நிம்மதியாக வேலை பார்க்கச்செய்தோம்.

ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. கையில் வெண்ணெயை வைத்துகொண்டு, நெய்க்கு அலைகிறார்கள் . ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமான மின்சாரம் கூடங்குளத்தில் கிடைக்ககூடும். ஆனால் அந்த அணுமின்_நிலையமே வேண்டாம் என போராடும் போராட்டகாரர்களுக்கு மாநில அரசு ஆதரவு தருகிறது. கூடங் குளத்தில் போராடும் மக்களை அரசு தூண்டிவிடுகிறதா அல்லது பின்னாலிருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துவருகிறதா என்றால் அதற்கு பதில்_இல்லை. மெüனம் சாதிக்கின்றனர் என பேசினார்

Leave a Reply