சங்கரன்கோயில் இடைதேர்தல் பாரதிய ஜனதா வேட்பாளர் முருகன் நேற்று மாட்டு வண்டியில்_வந்து வேட்புமனு தாக்கல்செய்தார். முன்னதாக சங்கர நாராயணன் கோயிலில் வேட்பு மனுவிற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அங்கிருந்து மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தது . பகல் 12 மணிக்கு வேட்புமனுவை தாக்கல்செய்தார், மாநில பொதுச்செயலர் சரவணப்

பெருமாள், தேசிய செயற் குழு உறுப்பினர் அன்பு ராஜ், மாவட்டசெயலர் பாண்டித் துரை, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”நாட்டின் பொருளாதாரம்_நலிந்துள்ளது. கடுமையான மின்வெட்டு, விலை வாசி உயர்வால் மக்களின் வாழ் வாதாரம் கேள்வி குறியாக உள்ளது. டீசல், பெட்ரோல் விலை உயர்வினால் வாகனங்களை பயன் படுத்த முடியாதநிலை உருவாகியுள்ளது .

எனவே, இனி மாட்டு வண்டியில்தான் மக்கள் பயணம்செய்ய முடியும். இதை உணர்த்தவே மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்செய்தேன்,” என்றார்.

பாரதிய ஜனதா , மாநில எஸ்.சி., அணி தலைவரான முருகன், 2006 ம் ஆண்டில் சங்ககிரி, 2011ல் ராசிபுரம் சட்டசபை தொகுதிகளில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply