பொது வாழ்கையில் ஈடுபட வைத்து, மீண்டும் முதல்வராக்கி யதற்காக ஜெயலலிதா என்னை கைதுசெய்துள்ளார். எனக்கு இது மகிழ்ச்சிதான்,” என்று போலீஸ் காவல்முடித்த சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; ஜெயலலிதா பொதுவாழ்க்கையை விட்டு விலகுவதாக_அறிவித்து கடிதம்

எழுதிய போது, அவரை மீண்டும் பொதுவாழ்க்கையில் ஈடுபட செய்ததால், கருணாநிதி என்னை கைதுசெய்தார். ஜெயலலிதாவை பொதுவாழ்வில் ஈடுபடவைத்து, மீண்டும் முதல்வராக்கியதற்காக_ஜெயலலிதா என்னை கைதுசெய்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சிதான். காவல்துறையினர் என்னை நல்லமுறையில் நடத்தினர். நான் அவர்களிடம் எந்தவித வாக்கு மூலமும் அளிக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

Leave a Reply