மதுரையில் மேலும் இரண்டு நான்கு வழிசாலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது .

இந்த நான்கு வழிசாலைகள், மதுரை-ராமநாதபுரம், தஞ்சாவூர்-விக்கிரவாண்டிக்கு இடையே அமையா இருக்கிறது . இதன் திட்டமதிப்பீடு ரூ. 2230 கோடி.

புதிய திட்டத்தின் மூலம், மதுரை, சிலைமான்,மானாமதுரை, திருபுவனம், சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களுக்கு நான்குவழி நெடுஞ்சாலை வசதிகிடைக்கும் .

இந்த நான்கு வழிசாலைகள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகள் அபரிமிதமான வளர்ச்சியைபெறும். பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் அறிமுகபடுத்தப்பட்ட நான்கு வழிச் சாலைதிட்டம் இந்தியா எங்கும் மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரும் உபயோகமாக இருக்கிறது மேலும் இன்றைய அபரிதமான தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply