காஷ்மீரில் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்க பாகிஸ்தானிலிருந்து பல கோடி ருபாய் பணம் ஹவாலா மோசடியின் மூலம் கிலானியின் உதவியாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டுள்ளது

செய்து அலி ஷா கிலானி வடக்கு காஷ்மீரின் பாண்டி பூராவில் பிறந்தவர் இவர் திக்ரிக் இ-ஹூரியத்து எனும் அமைப்பை

தொடங்கி தற்போது ஹூரியத் மாநாடு என்ற பெயரில் இயக்கத்தை நடத்திவருகிறார். இவர் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உண்டு . இந்த நிலையில் இவரது உதவியாளர் குலாம் முகம்மது பட் பாகிஸ்தானிலிருந்து ரூ. 4 கோடியே 57லட்சத்தை பெற்றதாக கண்டறியபட்டது.

இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு திகார்சிறையில் அடைக்கப்பட்டர். இந்நிலையில் இந்தவழக்கில் டில்லி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply